95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்
உயிரில் கலந்து இருக்கும் இறைவனை உள்முகமாக உற்று நோக்கி அவனுடன் பிரிப்பின்றிச் சேர்ந்து இருந்து இன்பம் காணுகின்ற செயலே சிவச்செறிவு அல்லது சிவயோகம் என சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும்....
94. அகத்தவம் எட்டில் நன்று ஆற்றுதல்
சிவயோகம் அல்லது சிவச் செறிவு என்ற அகத்தவம் இயற்றுதலில் இரண்டாவது படிநிலையாக அமைவது நன்று ஆற்றுதல் என்று மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார். அகத்தவம் எட்டுப் படிநிலைகளில் குறிக்கப்படும் நன்று...
93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்
சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்ற அகத்தவம் கூடுவதற்கு எட்டு படிநிலைகள் உண்டு என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவச்செறிவில் அகத்தில் இறைவனோடு கூடி இருத்தலுக்கு வழி காணப்படுவதால் அகத்தைத் தூய்மை செய்தல் இன்றியமையாதது ஆகிறது....
91 & 92. அகத்தவம் எட்டு
சிவ ஆகமங்கள் இருபத்து எட்டு என்றும் அச்சிவ ஆகமங்களை அறுபத்து ஆறு பேர் சிவபெருமானை வணங்கி, அச்சிவபெருமானது ஐந்தாம் முகமான, உச்சி முகத்தின் வழியாகக் (ஈசான முகம்) கேட்டு உணர்ந்தார்கள் என்பதனைத் திருமந்திரத்தின்...
90. பெரியாரைத் துணை கொள்ளுதல்
அறத்தை நன்கு உணர்ந்தவர்களாகவும் தன்னைவிட அறிவிற் சிறந்தவர்களாகவும் உள்ளவர்களைப் பெரியோர்களாகக் கொண்டு அவர்களுடன் நட்பு கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்து அவர்களை வாழ்க்கையில் வழிகாட்டல்களாகக் கொள்ளுதல் இன்றியமையாதது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார்....
89. பொறுமை கடலினும் பெரிது
சீர்மிகு செந்தமிழரின் சீரிய சிந்தனையில் உதித்த தமிழ் மறையாகிய திருக்குறள் பொறுமையைப் பற்றி விரிவாகப் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது. தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல,...
88. சிவனடியாரை இகழாமை
சிவம் எனும் செம்பொருளை உணர்வதற்கும் அடைவதற்கும் குரு, லிங்கம், சங்கம வழிபாடு இன்றியமையாதது என்பதனைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையினை விளக்குகின்ற, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. திருக்கோவில்களிலும் இல்லங்களிலும் வைத்து வழிபடுகின்ற...
87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்
சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், உயிரானது எதையும் அழுந்தி நுகர்ந்தே அறியும் என்று குறிப்பிடுகின்றது. மேலும் இறையின்ப அநுபவம் என்ற நுகர்ச்சியையும் பட்டறிவினால் நுகர்தலாலேயே உணர முடியும் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது....
86. ஆசிரியரை இகழாமை
மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர், அவர்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்து ஒன்று மட்டுமே இருந்தன என்ற குறிப்பினை நமக்கு அளிக்கின்றார். அவ்வைம்பத்தொரு தமிழ் எழுத்துக்களையும் மந்திரங்கள் என்று குறிப்பிடுகின்றார். தமிழ் எழுத்துக்கள்...
85. பெருங்கேட்டினை நீங்குவோம்
“உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்பது சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும். கண்ணகியின் கற்புத் திறத்தாலேயே அவளுக்குக் “கற்புத் தெய்வம்” எனும் சிறப்பும் சேரன் செங்குட்டுவனின் சிலை எடுப்பும் கிடைக்கப் பெற்றது. கற்புடைய...












