சைவ வினா விடை (பக்கம் 2)
அவ்வுயிர் நல்வினைகளையும் தீவினைகளையும் செய்கிறது. இந்த இரு வினைகளுக்குத் தகுந்தபடி அது பிறந்தும் இன்பதுன்பங்களை அநுபவித்தும் பின்னர் இறந்தும் உழல்கிறது.on
உயிர் அழிவதில்லை; உடம்பு அழியக்கூடியது.
எல்லாக் காரியங்களுக்கும் தன்னிடத்தில் ஒடுங்குவதற்கும் அவை தோன்றுவதற்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதற்கு மாயை என்று பெயர். மா = ஒடுங்குதல், யா = விரிதல். மாயா என்பது மாயை (பொய்த் தோற்றம்) எனப்பட்டது.
நாம் செய்கின்ற வினை அல்லது செயல் கன்மம் எனப்படும். இது மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் ஏற்படும்.
அஃது செம்பில் களிம்பு போலவும் நெல்லில் உமியைப் போலவும் அமைந்திருக்கிறது.
இஃது உயிர்களைப் பற்றி நிற்கிறது. இதனால் உயிர்கள் மெய்யறிவு பெற்று இறைவனை உணர முடிவதில்லை. உணர முடியாதபடி ஆணவம் உயிருக்கு அறியாமையை ஏற்படுத்துகிறது.
அழுக்கு
அஃது ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகைப்படும்.
தளை, கட்டு, பந்தம், மலம் என்பன
உயிர்களைத் தொன்றுதொட்டுப் பற்றிக்கொண்டு நிற்கும் ஆணவத்தை ஆன்மா (உயிர்) செய்யும் பாவம், புண்ணியம் என்னும் இரு வினைகளையும் போக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ள உடம்பு, உலகம், அநுபவிக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பாசம் என்று பொருள்.
உயிர்களைக் குறிக்கும். ஆன்மா என்றும் அதனைச் சொல்லலாம்.
பதி என்பதற்குத் தலைவன் என்று பொருள். அது முழுமுதற் பொருளான சிவனைக் குறிக்கும்
கடவுள், உயிர், உலகம் என்பன.
அவை தெய்வத்தன்மை வாய்ந்தவை; முறைப்படுத்தப்பட்டவை. இவையே காரணம்.
தமிழ் வேதம், திருநெறித் தமிழ் என்பன.
மூவர் தமிழ்
தேவார முதலிகள்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தெய்வத்தைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள் என்று பொருள். தெய்வப் பாமாலை என்றும் சொல்லலாம்.
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு.
சிந்தித்த முடிவு. ஒன்றைப் பற்றி நன்கு சிந்தித்ததால் கிடைத்த முடிவு சித்தாந்தம். சித்தம் + அந்தம் என்னும் சொற்கள் சேர்ந்ததே சித்தாந்தம் என்னும் சொல்.
ஆராய்ச்சி, அநுபூதி (அநுபவ ஞானம்) இவற்றால் கிடைக்கப்பெற்ற முடிவு நூல்கள் சித்தாந்த சாத்திரங்கள் ஆகும்.
திருமுறைகள் பன்னிரண்டு.
இருபத்தேழு பெருமக்கள் திருமுறைகளைப் பாடியுள்ளனர்.
சிவத்தை அடையும் வழி என்பது பொருள். திருமுறைகள் என்பன தெய்வப் பாடல்கள்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.
இறைவனிடமிருத்து வந்தது; பெரிய விருப்பத்தைத் தருவது. பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றிக் கூறுவது என்று பொருள்.
சைவ ஆகமங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்பன.