21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...
7. விருந்தோம்பல்
பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க...
89. பொறுமை கடலினும் பெரிது
சீர்மிகு செந்தமிழரின் சீரிய சிந்தனையில் உதித்த தமிழ் மறையாகிய திருக்குறள் பொறுமையைப் பற்றி விரிவாகப் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது. தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல,...
19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்
சிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ...
36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
பெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர்...
104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
நிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால்,...
8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை
உயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...
57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...
9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்
ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு...
6. ஏகன் அநேகன் இறைவன்
6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது. இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத "சிவமாக" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் "சிவன்" ஆகின்றான் என்று திருமந்திரத்தின் முதல் பாடலான, "ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..", எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் "சிவை" என்கிறது.
பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், "எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்" என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே,...