பொது வினா விடை

3526

பொது வினா விடை

சிவமாம் தன்மை பெற்ற அடியார்கள் சாயுச்சிய நிலையில் இருப்பதால் அவர்கள் நாம் செய்யும் குருபூசைச் சிறப்புகளை ஏற்று கொள்வதில்லை. இறைத்தன்மை பொருந்திய அவர்களுக்குச் செய்யும் பூசைகள் யாவையும் சிவபெருமானே அவர்கள் வடிவில் தங்கியிருந்து நேரடியாக பெற்றுக் கொள்கிறார்.
சைவம், வைணவம், சாக்தம், கணபதேயம், கௌமாரம், சௌமாரம், சௌரம் என்பன ஷண்மதம் எனப்படும். இதனை அமைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.
சத்துவ குணம் - சாத்துவிகம் (நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம்). ரஜோ குணம் - இராசதம் (ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி). தமோ குணம் - தாமதம் (காமம், வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம்) என்பன முக்குணங்களாகும்.
அவை தூல உடல், சூக்கும உடல், காரண உடல் என்பனவாம்.
மலர், நீர் கொண்டு வழிபடுவதும், திருமுறைகளை ஓதுவதும், அவனுக்குரிய திருமந்திரத்தை ஓதுவதுமே ஆகும்.
பக்தி என்பது இறைவனிடத்தில் செலுத்தப்படும் அன்பாகும். இறைவனிடத்தில் அன்பு ஏற்படும் போது அவரைப்பற்றிய சிந்தனை ஏற்படுகின்றது. பக்தி முற்றமுற்ற இறைவனுடைய எண்ணம் எப்போதும் உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கும்.
எல்லாம் அவனுடையது. அனைத்தும் அவன் செயல் என்னும் உணர்ச்சி நெஞ்சில் எப்போது வந்து குடிகொள்கிறதோ அன்று அகங்காரம் ஒழியும்.
பசு என்று சொல்லப்படும் உயிர் அஃதாவது ஆன்மா பாசத்தை விட்டு நீங்கிச் சிவத்துடன் இரண்டறக் கலந்து விடுவதற்கு முத்தி அடைதல் என்று பெயர்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன அந்தக் கரணங்களாம்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐந்தும் ஞானேந்திரியங்களாம்.
வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்பன கன்மேந்திரியங்களாம்.
ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஒசை என்பன தன்மாத்திரைகளாம்.
பிருதிவி (நிலம்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (வளி), ஆகாசம் (வான்) என்பன ஐம்பூதங்களாகும்.
உயிர்களைப் பற்றியுள்ள அழுக்கை - ஆணவத்தை நீக்கி உயிர்களைப் பக்குவப்படுத்தும் பொருட்டே இறைவன் கருணையுள்ளங்கொண்டு இவற்றைப் படைத்தருளினார்.