சைவ வினா விடை

5675

சைவ வினா விடை (பக்கம் 1)

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் இப்பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரங்களாகும்.
உலகமும் உயிர்களும் அவரிடத்தே பொலிவுறுகின்றன. அனைத்தும் அவருடன் சேர்ந்து விளங்குவதால் எல்லாம் சிவமயம் என்கின்றனர்.
அவை (பதி), பசு (உயிர்), பாசம் (உலகம்) என்னும் முப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்றன.
கொடிமரம் சிவத்தை குறிக்கும். அதிலுள்ள கொடி ஆன்மாவைக் குறிக்கும். கொடிக்கயிறு பாசம் ஆகும்.
மெய்கண்டார், அருள்நந்தி, மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வரும் சந்தான ஆச்சாரியராவர். இவர்கள் சந்தான குரவர் என்றும் சொல்லப்படுவர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சமயாச்சாரியார் எனப்படுவர்.
அல்ல. சிவபிரானுடைய அருளையே நாம் அம்பிகை அல்லது சக்தி என்று சொல்லிப் பெண் தெய்வமாக வணங்குகிறோம்.
ஆணவம் ஒன்று மட்டும் உள்ளவர்கள் விஞ்ஞானகலர் எனப்படுவர்.
மாயை தவிர்த்த மற்ற ஆணவம், கன்மம் இரண்டும் உள்ளவர்கள் பிரளயாகலர் எனப்படுவர்.
ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்றும் உள்ளவர்கள் சகலர் எனப்படுவர்.
ஆன்மாக்கள் மலபந்த வேறுபாட்டால் மூவகைப்படுவர். அவர்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்பவர்.
இறைவன் தன்னுடைய சொரூப நிலையிலிருந்து இறங்கி வந்து படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களையும் நிகழ்த்துகின்றார். இப்படி நிகழ்த்தும் நிலை தடத்த நிலையாகும்.
உருத்திர + அக்கம் உருத்திராக்கம் என்றானது. உருத்திரன் எனில் சிவன். அக்கம் எனில் கண். உருத்திராக்கம் எனில் சிவனுடைய கண் என்று பொருள்.
திருநீறும் உருத்திராக்கமும் சிவ சின்னங்களாகும்.
இறைவன் எங்கும் நிறைந்தவன். அவனை ஒரு மனப்பட்டு நினைப்பது எல்லோராலும் முடியாது. அஃது அரிய செயல். ஓர் இடத்தில் மனத்தைப் பதித்து வழிபாடு செய்வதற்காகவே இறைவனை ஓர் உருவத்தில் அமைத்து வணங்குகிறோம். உருவம் இருந்தால் தான் மனத்தை அதிற் செலுத்த இயலும்.
இறைவனை அடைவதற்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வழிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.
ஓர் ஆன்மா நல்வினை தீவினைகளுக்கு ஏற்றப்படி அதற்கு உடல் தரப்படுகிறது. எனவே, இறந்தபின் ஓர் ஆன்மா அது செய்த வினைக்கு ஏற்ப எந்த உடலையும் எடுக்கும். மனித உடலே எடுக்கும் என்று சொல்ல முடியாது.
ஆன்மாவில் தீய குணங்களை உண்டாகச் செய்து செம்பில் களிம்பு ஏறியிருப்பது போல அதனுடன் இருக்கும் ஆணவ மலத்தின் ஆற்றலைக் கெடுத்து அதனால் ஏற்படும் மயக்கத்தை தீர்ப்பதற்காகவே இறைவன் ஆன்மாவுக்கு உடலைக் கொடுக்கின்றார்.
தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள இடம் சிற்சபையாகும். இதனைச் சிற்றம்பலம் என்றும் சொல்வர்.
காஞ்சீபுரம் (பிருதுவித்தலம்), திருவானைக்கா (அப்புத்தலம்), காளத்தி (வாயுத்தலம்), திருவண்ணாமலை (தேயுத்தலம்), சிதம்பரம் (ஆகாயத்தலம்). பிருதுவி - மண், அப்பு - நீர், வாயு - காற்று, தேயு - தீ, ஆகாயம் - பரவெளி.
அவருடைய நடனம் படைத்தல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை விளக்குகிறது. இந்த உலகம் சதா இயங்கியப்படியிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.
ஆகமங்கள் சிவபெருமானையும் அவர் எடுத்த மூர்த்தங்களான விநாயகர், முருகர் முதலாய கடவுளரை வழிபடும் முறைகளையும் கூறுகின்றன.
லி + கம் என்னும் இரண்டும் சேர்ந்து லிங்கம் என்றாயிற்று. இலிங்கம் என்றால் இந்த உலகம் ஒடுங்குவதற்கும் மறுபடியும் தோன்றுவதற்கும் காரணமாயுள்ள ஓர் அடையாளம் என்பது பொருள்.
கன்மம் என்பது வினை அல்லது கருமம். இந்த வினை சிற்றறிவின் காரணமாகத் தோன்றும் விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு நிகழ்வது. மனம், வாக்கு, காயம் மூன்றாலும் இக்கன்மம் செய்யப்படுகிறது. இந்த வினை சஞ்சித வினை, பிராரத்துவ வினை, லைகாமிய வினை என மூவகைப்படும்.
இறைவனுக்கு அருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி, உருவத் திருமேனி, என்னும் முத்திருமேனிகள் உள்ளன.
உருவமில்லாதவனாகிய இறைவன், உயிர்கள் (ஆன்மாக்கள்) தம்மைத் தியானம் செய்வதும், பூசித்தும் முத்தியின்பம் அடைவதற்காகவே பல மூர்த்தங்களாக விளங்குகின்றார்.
பிரமனுக்கு பிராமி (கலைமகள்). திருமாலுக்கு நாராயணி (திருமகள்). உருத்திரனுக்கு உமை (பார்வதி). மகேசுவரனுக்கு மகேசுவரி. சதாசிவனுக்கு மனோன்மனி.
பிரமன் படைத்தல் தொழிலைச் செய்கிறான். திருமால் காத்தல் தொழிலைச் செய்கிறான். உருத்திரன் அழித்தல் தொழிலைச் செய்கிறான். மகேசு மறைத்தல் தொழிலைச் செய்கிறான். சதாசிவன் அருளல் தொழிலைச் செய்கிறான்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தும் (பஞ்ச = ஐந்து, கிருத்தியம் = தொழில்). இந்த ஐந்து தொழில்களையும் குறிப்பதே சிவன் ஆடும் நடனம்.
சிவன் செய்யும் ஐந்து தொழில்களுக்கும் பஞ்ச கிருத்தியம் என்று பெயர்.

பக்கம் : [ ] [ ] [ ] [ ]