சைவ வினா விடை (பக்கம் 3)
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்.
உமை, விநாயகர், முருகன் ஆகிய திருவுருவங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் பொருளாகவும் வழிபாடு செய்பவர்கள்.
சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு அவரை வழிபடும் நெறி.
வழி, நெறி என்று பொருள்.
இறைவனுடைய திருவருளே தீர்த்தம். இது மும்மலம் நீக்கும். தீர்த்தத்தைப் பருகுவதன் வழி இறையாற்றல் நம் உடலினுள் சென்று கலக்கிறது.
உலகத்தில் இறைவனுடையத் திருவருளே நிலையானது, மற்றது நிலை இல்லாதது எனும் தத்துவத்தை உணர்த்துவது. இறைவனுடையக் கருணைத் திறத்தைக் குறிப்பது. நம் மும்மல நோயை நீக்க வல்லது.
குனிந்து செல்வது பணிவைக் குறிக்கும். அப்போது நமது மனத்திலுள்ள அகங்காரமும், ஆணவமும் சற்று குறையத் தொடங்கும். எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன் கோயிலினுள் இருப்பதால்,வாயிற் படியை வணங்குகின்றோம். இறைவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நுழையக் கூடாது.
உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.
இறைவனுடைய அருள் ஒளி வடிவமாக நம்மிடம் வருவதைக் கற்பூர தீபம் குறிக்கிறது. அதனைத் தொட்டு கண்களில் ஒற்றி கொள்ளும் பொழுது, இறையாற்றல் நம் கண்களின் வழியே நம் உடலுக்குள் செல்கிறது.
வாகனம் பக்குவம் பெற்ற உயிரைக் குறிக்கும். அது என்றும், எப்பொழுதும் இறைவனையே நோக்கிக் கொண்டிருக்கும்.
தரையில் வீழ்ந்து வணங்குவது பரிபூரண சரணாகதியைக் குறிக்கும். இறைவனின் திருமுன்னால் நம்முடைய ஆன்மாவைக் கிடத்தி, அவர் அருளை வேண்டுவதற்காகவே தரையில் வீழ்ந்து அவர் திருவடியைச் சரணாகதி அடைகிறோம்.
பஞ்சாங்கம் – ஐந்து உறுப்பு தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதலே பஞ்சாங்க வணக்கம் எனப்படும். பெண்கள் இப்பஞ்சாங்க வணக்கத்தினைச் செய்வர்.
அட்டாங்கம் - எட்டு உறுப்பு தலை, கையிரண்டு, செவியிரண்டு, மேவாய், தோள் பட்டைகள் என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும் படி வணங்குதலே அட்டாங்க வணக்கம் எனப்படும். ஆண்கள் இவ்வாட்டாங்க வணக்கத்தினைச் செய்வர்.
‘வணக்கம்’ கூறி ஒருவரை வணங்குதல் என்பது அவருடைய உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை வணங்குதல் ஆகும். வணக்கம் மூவகை படும் அவை வருமாறு:-
i. தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது இறைவனுக்கு மட்டுமே செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
ii. புருவ மத்தியில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது குருவிற்கு செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
iii. நெஞ்சில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் - நம் வயதை ஒத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
பன்னிரு திருமுறைகள்
உயிர்க்குள்ள ஆணவமல மறைப்பு அறவே நீங்கப் பெற்று, உயிர் சிவமாம் தன்மை பெற்று இறைவன் திருவடியில் பேரின்பத்தில் இருப்ப என்பதாகும்.
சிவமாம் தன்மை பெற்ற அடியார்கள் சாயுச்சிய நிலையில் இருப்பதால் அவர்கள் நாம் செய்யும் குருபூசைச் சிறப்புகளை ஏற்று கொள்வதில்லை. இறைத்தன்மை பொருந்திய அவர்களுக்குச் செய்யும் பூசைகள் யாவையும் சிவபெருமானே அவர்கள் வடிவில் தங்கியிருந்து நேரடியாக பெற்றுக் கொள்கிறார்.
அட்ட வீரட்டானம்
தில்லை சிதம்பரம்
சக்தியோடு சேர்ந்திருக்கும் இறைவன், தன்னளவில் எவ்வித மாற்றமும் இன்றி முழு அறிவோடும் பேரானந்தமும் உடையவராக இருக்கிறார்.
திருநாவுக்கரசர் / அப்பர்
உண்டு. 63 நாயன்மார்கள்.
வழிபடக்கூடாது. அனுமான் ராம அடியார். அவரை இராமர் கோவிலில் வைத்து வழிபடுவதுதான் முறையாகும்.
திருவருளின் துணைக் கொண்டு உயிர்கள் முயற்சிகள் செய்கின்றன. உயிர்களின் அறிவு, இச்சை, செயலுக்கு உட்பட்டே வினைகளும் இறைவனால் செர்ப்பிக்கப்படுகின்றது.
இந்திய சமயங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை. இச்சமயங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நூல்கள் உள்ளன. பகவத்கீதையை இந்து சமயத்தின் பொது நூல் என்று சொல்வது பொருத்தமாகாது.
ஒவ்வொரு பிறவிகளிலும் உயிர் பல வகையான உடம்புகளைத் தமக்கு இடமாய் கொள்வது போல கல்லையும் தமக்கு இடமாய் கொள்ளும். கல் அசையாமல் கிடக்கும். அதன் உள்ளே உள்ள உயிர்களும் அசைவு இன்றிச் செயலற்றுக் கிடக்கும். இந்நிலையைக் கல்லாய் என்று மணிவாசகர் குறிக்கின்றார்.
அரிய கருத்துகளைப் பாமரர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் கூறப்பட்டதே புராணக் கதைகள். புராணங்களைப் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போகாது. வினைகளைத் தீர்க்கவும் புதிய வினைகள் வராமல் தடுக்கவும் இறை வழிபாடு ஒன்றே வழி.
ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம
சைவ சமயம்