சைவ வினா விடை (பக்கம் 4)
உண்மை இல்லை. சித்தத்தில் பதிவாகி கிடக்கும் எண்ணங்கள் வெளிப்படும் போது கனவாக உணரபடுகின்றன.
செய்ய வேண்டியது இல்லை. அன்றைய தினம் அவர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயரால் நற்செயல்கள் செய்யலாம். திவச கிரியா பலன்கள் இறந்தவர்களைச் சென்று சேர்வதில்லை.
இறைவன் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி இருக்கும் படி அமைத்துக் கொள்ளலாம். அறை இல்லை என்றால் இருக்கும் அறையில் பொருத்தமான இடத்தில் பூசை மேடையை அமைத்துக் கொள்ளலாம்.
பேய்கள் உண்டு. இறந்து அடுத்த பிறவிக்குச் செல்லும் முன் சில காலம் உயிர் நுண் உடலில் தங்கி இருக்கும். அந்த நிலையில் உயிர்கள் பேய்கள் அல்லது ஆவிகள் என்று சொல்லப் படுகின்றன.
சிறு தெய்வங்கள் நம்மைப் போன்ற உயிரினத்தைச் சார்ந்தவை. அவை பிறக்கும், இறக்கும், மேல் வினைகள் செய்யும். உயிர்களின் வினையை ஒடுக்கி பிறவா நிலையைக் கொடுக்கும் ஆற்றல் அற்றது. பரம்பொருள் பிறப்பு, இறப்பு, வினை என்ற யாவற்றையும் கடந்து சத்சித் ஆனந்தமாய் சிறப்பு நிலையில் இருப்பது. உயிர்களின் வினைகளை ஒடுக்கி பிறவா நிலையைக் கொடுப்பது.
பழநி, சுவாமி மலை, பழமுதிச் சோலை, திருத்தணிகை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்
முடியாது. கரு, விதை, கிழங்கு & வியர்வையில் இருந்து தோன்றுவன இறைவனாகாது.
'இல்லக விளக்கது' எனும் தமிழ் மந்திரத்தை ஓதியவாரே விளக்கு ஏற்ற வேண்டும். அல்லது 'நமசிவய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும் விளக்கு ஏற்றலாம்.
பூமி வலது புறமாக சுழழுவதால், கோவிலை வலது புறமாக வலம் வருகிறோம்.
12-ஆம் திருமுறை / பெரிய புராணம்
சண்டிகேசுவரர்
சனகர், சனாதனர், சனந்தனர் & சனற்குமாரர்
மார்கண்டேயர்
திருவண்ணாமலை
திருமுருகாற்றுப்படை
சுந்தர மூர்த்தி நாயனார்.
10-ஆம் திருமுறை / திருமந்திரம்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலும் பெருமானின் அற்புதக்கூத்தில் அமைந்துள்ளது. வலக்கையிலுள்ள (துடி) உடுக்கை ஒலியை உண்டாக்கும்; அதுவே ஓசையைக் காட்டுகின்றது. ஓசையே உலக படைப்பிற்கு அடிப்படை. எனவே இந்த உடுக்கை படைப்பு தொழிலைக் குறிக்கின்றது. மற்றோரு வலக்கை அபய கரம் (அமைந்த திருகரம்). இந்த அமைந்த திருகரம் காத்தல் தொழிலைக் காட்டும். தூக்கிய இடக்கையில் உள்ள நெருப்பு உலகை அழிக்கும் கருத்தைக் குறிக்கும். முயலகன் மீது ஊன்றியத் திருவடி மறைத்தல் தொழிலைக் குறிக்கும். எடுத்தத்திருபாதம் (தூக்கிய திருவடி) அருளல் தொழிலைக் குறிக்கும். இக்குறிப்பினைத் திருமூலர் திருமந்திரத்திலே இவ்வாறு கூறுகின்றார்.
அரன்துடி தோற்றம்; அமைத்தல் திதியாம்;
அரன் அங்கிதன்னில் அறையிற் சங்காரம்;
அரன் உற்றணைப்பில் அமரும் திரோதாயி;
அரனடி என்னும் அனுக்கிரகம்மே
இறைவன் நமக்குப் போகங்களைத் தருபவர், என்பதனைக் குறிக்கின்றது.
இக்கருத்தினை, பொன்னும் மெய்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்பானைப்’ எனும் சுந்தரரின் பாடல் வரிகளோடு ஒப்பு நோக்கி மகிழலாம்.
இடம் பெற்றிருக்கின்றன. திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்புவதற்காகப் பாடிய பதிகத்தில் சைவசமயத் தொடர்பான பல விழாக்களைக் குறிப்பிட்டு அவற்றைக் ’காணாதே போதியோ பூம்பாவாய்’ எனக் கூருகின்றார். அப்பதிகத்தில் ஒரு பாடலில் ’காபலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கின்றார். அப்பர் தேவாரத்தில் ’திருவாதிரைத் திருப்பதிகம்’ என்று ஒரு பதிகமும் (10 பாடல்கள்) அமைந்துள்ளது. திருவாதிரையின் சிறப்பினைக் கூறும் இப்பதிகத்தின் ஒவ்வோரு பாடலின் இறுதி வரியிலும் ’ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’என முடிகின்றது. சேக்கிழாரின் பெரிய புராணத்தில் அப்பர் புராணம் (2398), சம்பந்தர் புராணம்(1505) ஆகியப் பாடல்களில் திருவாதிரைப் பற்றிய குறிப்பு வருகின்றது. 9ம் திருமுறையான திருப்பல்லாண்டும், கொடிக்கவி என்னும் சாத்திர நூலும் எழுந்த நாள் திருவாதிரை நன்னாநாளே ஆகும். தமிழ் இலக்கியத்தில் பரிபாடலில் 8வது செய்யுளில் ”ஆதிரை முதல்வன்’ என்னும் சிவபெருமானைக் குறிக்கும் ஒர் தொடர் வருகின்றது. கலித்தொகை அதன் பகுதியாகிய நெய்தற்கலியில் ’அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த’ என்னும் தொடர் (கலி 150-20), திருவாதிரை நாளன்று சிவபெருமான் அணிகளை அணிதிருப்பதுப் போல அமைந்த ஒரு செண்பக மரம் பற்றிய தொடர் வருகிறது.
கொடுப்பார். ஒரு சமயம் திருவீழிமிழலையில் பஞ்சம் போக்குமாறுப் பணிக்க திருஞானசம்பந்தர், மற்றும் அப்பர் பெருமான் கனவில் இறைவன் தோன்றினார், என்பதனை பெரியபுராணத்தில் சேக்கிழார் ’பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசருக்கும் கையில் மானும் மழுவுமுடன் காணக் கனவில் எழுந்தருளி... என மொழிகின்றார். பெருமானின் திருவருள் சுரக்கும் திருவடிகளை இடைவிடாமல் சிந்தித்துச் சைவத்திற்கும் தமிழுக்கும் முனைப்பு இல்லாதப் பணியைச் செய்து வந்த பெரியவர்களுக்கு இறைகாட்சி கிடைத்தது. அது போல நாமும் இறைவனை இடைவிடாமல் சிந்தித்து நமது தொண்டினைச் செவ்வனவே செய்து வந்தால் நமக்கும் இறை காட்சி கிடைக்கும். இதனைத் ’தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது’ என்கிறது சிவஞான சித்தியார்.
தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்துக் கொண்டிருக்கின்றப் பெருமானுக்கு நம்மால் கைமாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர்’யான் இதற்கு இலன் ஓர் கைமாறே’ என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்பதில்லை. இதனை வேண்டுதல் வேண்டாமை இலான்’ எனும் குறள் வழித் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளுவ பெருந்தகை. இவ்வாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்துக் கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவு பொருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடையப் பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம்.
கோயிலின் கருவறை ஒலி அலைகளின் (இறை ஆற்றலை கடத்தும்) கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது. மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள உள்ள நவரத்தினக் கற்களும், யந்திரத் தகடும் பூமிக்கு அடியில் இருந்துக் கிடைக்கப்பெறும் ஆற்றலை மூலவரின் திருவுருவச் சிலைக்குக் கடத்துதுகின்றன. எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்றுக் கொண்ட மூலவரின் திருவுருவச் சிலை, அதனை இறை ஆற்றலாக மாற்றி இறைவன் திருமுன்பு இருக்கும் வாகனம்,பலி பீடம், மற்றும் உற்சவ மூர்த்தங்கள் மீது அவ்வாற்றலைக் கடத்துகிறது. பிறகு கோயில் முழுவதும் அவ்விறையாற்றல் பரவுகிறது. அங்கே வழிபட வருகின்ற அடியவர்கள் மீதும் அவ்விறையாற்றல் பதிகின்றது. கருவறையில் இருந்து வரும் அருள் ஒலி அலை எப்பொழுதும் கிடைக்க, கருவறை இருட்டாக இருத்தல் அவசியம். அதோடு பெருமானுக்கு முறையான பூசைகளும், நிறைவான திருநீராட்டுதலும், அவசியம் நடைபெறவேண்டும்.
முருகன் குறிஞ்சி நிலமாகிய மலை நிலத் தெய்வம் என்பதால் மலை மீது கோயில் கொண்டிருந்தார். முருகப் பெருமானின் அடியவரான இடும்பன் என்பவர் இறைவனுக்கு அபிடெகப் பொருட்களை ஒரு கோலின் இருமுனைகளில் கட்டி தோள்களில் சுமந்துச் சென்று மலை மீது இருக்கும் அப்பெருமானைத் திருநீராட்டி வந்தார். அவருடைய அன்பிற்கு மகிழ்ந்த இறைவன் தை மாதத்தில் பூச நட்சத்திரதன்று இடும்பனுக்கு முக்தி இன்பம் அளித்தார். ஆகவே தைபூசத்தன்று இறைவனைத் திருநீராட்டுவதற்கு அபிடேகப் பொருட்களைக் கொண்டுச் செல்வதே காவடியின் நோக்கமாகும். தோளில் தூக்குவதைக் ’காவுதல்’ என்றும் கூறுவர். ஆகவே தோளில் சுமக்க உதவிய தடி ’காவு’ என சொல்லப்பட்டது. காவு தடி ’காவடி’ ஆனது.
திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும், திசைத் தெய்வங்களும், அந்த-அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டும் விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள்., அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால், எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும்.