Thursday, April 25, 2024

44. சிவசித்தரும் தவசித்தரும்

அடயோகம் அட்டாங்கயோகம் ஆகிய தவயோகங்களையும் கடந்ததுவாய் அவற்றிற்கு மேம்பட்டதுவாய்த் திருமூலர் சொல்கின்ற சிவயோகம் திகழ்கின்றது. இச்சிவயோகத்தை நவயோகம் அல்லது மற்ற யோகங்களின் வேறுபட்டப் புதிய யோகம் என்றே திருமூலர் குறிப்பிடுகின்றார். தவயோகங்களில் உயிர்களின்...

43. சிவயோகமும் தவயோகமும்

சீர்மிகு செந்தமிழர் இறைவனை அடைய வகுத்து வைத்துள்ள நன்மை நெறிகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பனவாம். இவற்றில் இறைவனை அகத்தில் இருத்தி அகவழிபாடு...

42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்

சூரியன் எனும் கதிரவனின் கதிர் ஒளியை ஏற்று வெளியிடும் கல் சூரிய காந்தக் கல். சூரியனின் ஒளியை ஈர்த்துத் தன்னுள் கொள்ளும் ஆற்றல் உடைமையினால் இக்கல்லைச் சூரிய காந்தக் கல் என்று குறிப்பிடுவர்....

41. உள் எழும் சூரியன்

“பேராற்றலும் பெரும் கருணையும் தூய பொருளுமாய உன்னை எனக்குத் தந்து, சிற்றறிவும் தன்னலமும் சிறுமையும் உடைய என்னை உனது அடியவனாகக் கொண்டாயே இறைவா! நீ என் உடலினை உனக்கு இடமாகக் கொண்டதனால் முடிவில்லாத...

40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்று உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதனை, “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். உலகங்களும் உலகத்திலுள்ள...

39. உயிரில் நின்றுதவும் பெருமான்

இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு பொருளாய் இருக்கின்றான் என்று சிவ ஆகமங்களும்...

37. முயல் தவமே பிறவியை அறுக்கும்

அறம் வாழ்கின்ற இடமாக உள்ள இறைவனின் திருவடிகளைத் தொழாமல் பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இயலாது என்பார் ஐயன் திருவள்ளுவர். வாழும் இப்பிறவியையும் இனி வரும் பிறவிகளையும் போக்கிக்கொள்வதே இப்பிறவியின் நோக்கம் என்றும்...

36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

பெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர்...

33. நச்சு மரம் பழுத்தது

நேற்று இருந்த ஒருவர், இன்று இல்லாமல் இறந்து போனார் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமையை உடையது இவ்வுலகம் என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். உலகியல் வாழ்வு நிலையற்றது; நிலையான இறையுலக வாழ்வினைப்...

32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்

சீர்மிகு செந்தமிழரின் வீரத்தினையும் கொடையினையும் பறைசாற்றி நிற்பன புறநானூநூற்றுப் பாடல்கள். கொடை அல்லது ஈகையை அவர் அவர் நிலையில் இயற்ற வேண்டும் என்பதே தமிழர் வகுத்த அறம். இதனையே, “இயல்வது கரவேல்”, “ஈவது...
- Advertisement -

MOST POPULAR

HOT POST