31. மழை இறைவனது திருவருள் வடிவு
மழையின் சிறப்பினை, “வான் சிறப்பு” எனும் அதிகாரத்தில் ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருதலால் மழை உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இறவா நிலை அளிக்கும் அமிழ்தம் என்கின்றார். மழை...
30. கல்லாத தலைவனும் காலனும்
கல்வி கற்றதன் பயன் தூய அறிவினன் ஆகிய இறைவனின் நன்மை பொருந்திய திருவடிகளைத் தொழுவதற்கே என்பதனைக், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழார் எனின்” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மனத்தாலும்...
29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்
எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருளைக் கொண்டு நடத்தலால், அந்தணர் எனப்படுபவர்கள் அறத்தை உடையவர் என்பதனை, “அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டு ஒழுகலான்” என்பார் ஐயன் திருவள்ளுவர். அறத்தை உடையவர் யாவரேனும்...
28. பரம்பொருள் உரைத்த நெறி
முத்தமிழுக்கும் சங்கம் அமைத்து, சங்கப் புலவர்களைக் கொண்டு, சங்கப் பலகையின் நேர்கொண்டு அதனை நிலைநிறுத்தித் தமிழ் ஆய்ந்து, தமிழைப் பேணிக் காத்து வளர்த்தவர்கள் சீர்மிகு செந்தமிழர்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற...
27. பனை மரத்துப் பருந்து
உயிர் தங்கி வாழும் உடம்பு நிலை இல்லாதது என்பதனால், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா,” என்ற பொதுப்பாடல் ஒன்று உண்டு. உடல் நிலை இல்லாதது, அது அழிந்துபடும் என்றாலும் மெய்ப்பொருளான...
26. பிழை பொறுக்கும் பெரியோன்
சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், சைவர்கள் வழிபடவேண்டிய முழுமுதல் பொருளாகச் சிவனைக் குறிப்பிடுகின்றது. இருபத்தெட்டு சிவ ஆகமங்களும் பன்னிரண்டு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும் சைவ புராணங்களும் சிவனையே முழுமுதல் பொருளாகக்...
25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது
முற்பிறவிகளில் செய்த செயல்களின் பலனே நமக்கு பிறவியையும் ஒவ்வொரு பிறவியிலும் நாம் நுகர வேண்டிய நுகர்ச்சிப் பொருள்களையும் தருகின்றன என்பதை, “பண்டு செய்த பல வினையின் பயன்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்....
24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி
கண்கள் இமைக்கின்ற கால அளவு கூட இறைவன் நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்,” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். உடலில் உயிர் உயிர்க்கும்தொறும் இறைவன் நம்மில்...
23. கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வன்
இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு கோ + இல் என்று பெயர். இறைவனின் திருவருள் விளங்கித் தோன்றும் நிலையமாகத்...
22. இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்
அன்பே சிவம் என்பது பலரும் அறிந்த ஒன்று. அன்புறு சிந்தையராகி அடியவர்கள் இறைவனுக்கு நண்புறுவர் என்பார் திருஞானசம்பந்தர். சீர்மிகு செந்தமிழர் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் விதிமுறைகளை வகுத்து வைத்துக் கொண்டுப் பெருமானை வழிபடுவதனைக்...















