21. அழுதால் அவனைப் பெறலாம்
பெருமானின் திருவருளைப் பெறுவதற்குப் பலரும் பல்வேறு வழிகளைக் குறிப்பிடுவர். சிலர் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று உலக உயிர்களுக்கு உணவு, உறையுள், உடை கொடுத்துத் தொண்டு செய்து வாழ்வதன் வழி இறைவனை...
20. உண்மையான கடவுளை வழிபடுவோம்
சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் கடவுளின் இயல்புகளை விளக்குகையில், பரம்பொருளான கடவுள் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன் என்று குறிப்பிடுகின்றது. முட்டை, கரு, விதை, வியர்வை என்ற உயிர்களின் நால்வகைத் தோற்றத்திற்கும் வானவர்,...
19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்
சிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ...
18. அறிவால் வழிபடுவோம்
சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், இறைவனை அடைவதற்குச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு(சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்னும் நான்கு வழிமுறைகளை முன்வைக்கின்றது. மேற்கூறிய ஒவ்வொரு வழிமுறையிலும் நான்கு அடிப்படைக் கூறுகள்...
17. இல்லை என்று எண்ண வேண்டா!
உலகம் எல்லாம் வல்ல ஒரு பரம் பொருளின் ஆணை வழி நடப்பது என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இப்பரம்பொருளையே, ‘வாலறிவன்” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுகின்றார். இவ்வரிய உண்மையினைத்...
16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்
இல்வாழ்வு என்பது பெருங்கடலைப் போன்றது. பல இன்ப துன்ப நுகர்ச்சிகளை உள்ளடக்கியது. உற்சாகத்தையும் தளர்ச்சியையும் மாறி மாறி அளிப்பது.. வாழ்ந்தே ஆக வேண்டியது. இன்பமும் துன்பமும் மாறி மாறி இவ்வாழ்க்கைப் பெருங்கடலினை நீந்துவதற்கும்...
15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்
மந்திரம் என்றாலே அது வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்றுப் பலரும் எண்ணி மயங்குகின்றனர். விரிவான பொருளைச் சுருக்கமாகச் சில எழுத்துக்களில் குறிப்பிட்டுக் கூறுவதுதான் மந்திரம். இவ்வுலகம் சொல் உலகாலும் பொருள் உலகாலும் ஆகி...
14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை
பெருமானின் ஆற்றலுக்கும் ஆணைக்கும் உட்பட்டே அனைத்து உலகங்களும் அதன் உட்பொருள்களும் இயங்குகின்றன என்பதனை, “அவனன்றி ஓர் அணுவும் அசையாது,” என்று சுருங்கக் கூறுவர். இதனையே மணிவாசகரும், “அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்...
13. நல்ல தவம் உடையவரின் உள்ளம் பெருமான் வாழும் கோயில்
இயல்பு இல்லற வாழ்வினைத் துறந்து, காவி உடை அணிந்து, தாடியையும் மீசையையும் வளரச் செய்து, காடுகளை இடமாகக் கொண்டு இறைவனை இடைவிடாது எண்ணுதலைத் தவம் என்பர் சிலர். இன்னும் சிலர் காடுகளுக்குச் செல்லாது...
12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்
காது உடைந்து போன ஊசி கூட நாம் இறந்து போனால் துணைவராது என்பார் பட்டினத்து அடிகள். வாழ்நாள் முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து சேர்த்து வைக்கும் பொருட்செல்வம் உடலோடு நின்றுவிடும். இறை...






















