திருச்சதகம்

2828

மெய்யுணர்தல் 

1. பொய் தவிர்த்து மனம், வாக்கு, காயத்தினால் வழிபடல் வேண்டும்.

2. சிவத்தை மட்டுமே வணங்குதல் வேண்டும், இறைவன் திருவருள் பெறவேண்டும் என்ற வேற்கை வேண்டும்.

3. உலக பதவிகள் நிலையல்ல, அதனால் திருவருள் வைராக்கியம் வேண்டும்.

4. சிவபரம்பொருள் மட்டுமே தன் நிகரற்றது மற்ற யாவையும் உயிர் வர்க்கமே (திருமால், பிரம்மா)

5. தவம் புரிதலும், மலரிட்டு வழிபடுதலும் சிவத்தை அடைய சிறந்த வழி.

6. இடையறா அன்பினால் வழிபடுதல் வேண்டும்.

7. காமிய வழிபாடு கூடாது.

8. இறைவன் சர்வ வல்லமையாளன் (காலத்தைக் கடந்தவன்).

9. இறைவன் மகா கருணையாளன்.

10. எல்லா உயிர்களையும் உய்விப்பதே இறைவனின் நோக்கம்.



 
அறிவுறுத்தல்

1. அடியார் கூட்டத்தில் இருப்பது அவசியம்.

2. திருவருள் பேற்றை பெருவதையே நோக்கமாக கொள்ள வேண்டும்.

3. திருவடி பேறு பெற சரியை.

4. கிரியை யோகம் செய்தல் அவசியம்.

5. இறைவன் உயிரில் ஒன்றாய், உடனாய், (அத்துவிதமாய்) நின்று அருளுவன்.

6. பிறவி அறுக்க வழிபாடு அவசியம்.

7. உண்மை அன்புடையவரே இறைவனைக் காண்பர்.

8. நன்றியினால் வழிபட வேண்டும்.

9. நிலையில்லா சிற்றின்பத்தை நாடுவதை விடுத்து நிலையான பேரின்பத்தை நாட வேண்டும்.

10. தவறினால் (சிற்றின்பம்) துன்பக்கடலில் சென்று மூழ்கடிக்கும்.



சுட்டறுத்தல்

1. இறைவன் மீது அன்பின்மைக்குக் காரணம் (யான் எனது எனும் பற்றுடைய) தீவினை.

2. இறைவனே உணர்த்த உயிர் இறைவனை உணரும்.

3. இறைவன் எல்லா உயிர்களையும் அதன் பக்குவத்திற்கு ஏற்ப ஆட்கொள்வான்.

4. மனம், வாக்கு, காயத்தினால் (கருவிகரணம்) வழிபடுதல் அவசியம்.

5. இறைவன் சுட்டி அறிய முடியாதவர்.

6. ஐம்புலன் ஒடுக்கம் இறையருளாளேயே வரும்.

7. பிறவிப்பெருங்கடல் நீந்த ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல் அவசியம்.

8. பக்குவ உயிர்களுக்கு இறைவனே குருவாக வந்து அருளுவன்.

9. அடியார்க்கு அடியன் ஆகுதல் அன்பை வளர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

10. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர் யாருக்கும் அடிமைப்படுவதோ, எதற்கும் அஞ்சுவதோ இல்லை, இன்பத்தில் திளைக்கலாம்.


 

ஆத்தும சுத்தி

1. உயிர் சிவபரம்பொருளைக் காண, அன்பு பெருகும் காரியத்தில் ஈடுபட வேண்டும்.

2. மெய் நெறி நில்லாது பொய் நெறி புகின் பாசத்தொடர்பு அறாது.

3. பொறி புலன்களினால் இறைவனைக் காண இயலாது.

4. உலக போகங்கள் நிலையான இன்பத்தை தறா (துன்பத்தைத் தரும்).

5. இறைவன் செய்யும் பேருதவியை என்றும் நன்றியினால் நினைந்து வழிபடல் வேண்டும்.

6. பக்குவம் பெற்ற உயிரே சிவலோகம் புகும்.

7. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் பிரிந்து வாழ்வது என்பது துன்பம் என்று உயிர் உணர வேண்டும்.

8. சிவலோகம் விரும்புவார் உலக போகத்தை விரும்பார்.

9. உலகத்தை துறந்து தன் உயிரை விடவும் துணிவர்.

10. உயிருக்கு உறுதிதரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.



கைம்மாறு கொடுத்தல்

1. உலக இன்பம் நிலையற்றது என்று உண்மையாக உணர வேண்டும்.

2. இறைவன் காட்சி பொருளன்று, அனுபவப் பொருள். அவ்வனுபவம் பெற்று சிவத்தைக் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்க வேண்டும்.

3. சதா ஏங்க வேண்டும்.

4. ஐம்புலன் நுகர்ச்சியில் வருவது துன்பமே என்றுணர்ந்து இறைவனை நுகரும் ஏக்கம் வேண்டும்.

5. மறக்கருணைக்கும் உயிரின்பால் கொண்ட அன்பே என்று உணர வேண்டும்.

6. இறைவன் தன் கருணையினால் உயிர்களை வலிய வந்து ஆட்கொள்கிறான் என்று உணர வேண்டும்.

7. சிவம் தானே வந்து அருளுவது, அதன் பெருங்கருணையினால், உயிரின் முயற்சியினால் அல்ல என்று உணர வேண்டும்.

8. இறைவனின் அருள் இன்றி இறைஞானம் பெறுதல் இயலாது என்று உணர வேண்டும். அவன் கருணையை நினைந்து உருக வேண்டும்.

9. இறைவனது அன்பை எண்ணி நன்றிக் கடப்பாட்டுடன் வழிபட வேண்டும்.

10. இறைவன் அறிவே வடிவானவன், உயிரின் அறியாமையை நீக்குவது அவனுடைய பெருங்கருணை என்று உயிர் உணர்ந்து நன்றியினால் வழிபட வேண்டும்.

[1] லிருத்து [10] வரை உயிர் உணர்ந்து செயல்படுமாயின் அதுவே உயிர் இறைவனுக்குச் செய்யும் கைம்மாறு.




அனுபோக சுத்தி

உயிர் தன் இயலாமையை உணர்தல்

ஆன்மா தன் உண்மை நிலையை சிவபரம்பொருள் உணர்த்த உணர்தல்

சிவானுபவத்தில் ஆன்மா தன்னை தூய்மை படுத்திக் கொள்ளுதல்.

1. இறைவன் செய்த பேருதவியை சதா நினைத்தல் – சுத்தி செய்யும் வழி

2. இறைவனின் திருவடியை சதா விடாது பற்றிக்கொள்ளுதல்.

3. இறைவனடி சேர்வதே இன்பம், சேராமை துன்பம் என்று உணர்தல்.

4. பக்குவம் பெறுவதே இறைவனை அடைய வழி என்றும், பக்குவம் பெற்றகால் அவன் தானே அருளுவன் என்று உணர்தல்.

5. பக்குவம் வந்த உயிர்கள் வீடுபேறு பெறுவது உறுதி என்றுணர்தல்.

6. பக்குவம் இல்லாதவர்கள் பக்குவம் வரும் வரை பொறுத்தல் வேண்டும்.

7. உலகப் பற்றுகள் சிவபோகத்திற்கு தடையாகும் என்றுணர்தல்.

8. இறைவன் ஆட்கொள்ளாத உயிர்களே இல்லை.

9. ஆட்கொள்ப்பட்ட உயிர்கள் பெறும் பேறு இறைவன் திருவடி இன்பம்.

10. இறை திருவடி காட்சி கண்ட உயிர் ஒரு வினாடி பொழுதேனும் சிவப்பரம்பொருளை விட்டு பிரிய எத்தனிக்காது.



ரூண்யத்திரங்கள்

(இறைவனின் கருணையை எண்ணி இறங்குதல்)

1. காயத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து இன்பம் தரும் இறைவனை எண்ணுதல்.

2. திருவைந்தெழுத்தின் வாச்சியப் பொருளான இறைவனே உயிர்களுக்கு மயக்கத்தைத் தவிர்த்து புகலிடம் தரும் கருணைக்கு இரங்குதல்.

3. மெளிணியன்பர், பொளிணியன்பர் இருவரையுமே ஆட்கொண்டு அருளும் இறைவன் திறன் கண்டு இரங்குதல்.

4. உயிர்களின் மனதில் இரக்கத்தை இறைவனே உண்டாக்குகிறான் என்று எண்ணி இரங்குதல்.

5. சரணடைந்தார்க்கு புகலிடமாகும் இறைவன் தன்மைக்கு இரங்குதல்.

6. இறைவனின் குற்றம் பொறுக்கும் அருட்தன்மை கண்டு இரங்குதல்.

7. சர்வ வல்லமை பொருந்திய இறைவன் உயிர்களுக்கு அருளும் பொருட்டு எளிமையாக வருதல் கண்டு இரங்குதல்.

8. ஆதரவு அற்ற உயிர்களுக்கு இறைவன் தன் திருவடி தந்து துணை நிற்பது கண்டு இரங்குதல்.

9. இறைவன் அன்பே உருவாய் இருத்தல் கண்டு இரங்குதல்.

10. எல்லாவற்றிலும் கலந்தும், பிரிந்தும் இருந்து உயிர்களுக்கும் அருளும் இறைவனின் அருட்தன்மை கண்டு இரங்குதல்.



ஆனந்தத்தழுந்தல்

(சிவானந்தம் பெற சிவத்திடம் மெய்யன்பு கொள்ள வேண்டும்)

1. எது நடந்தபோதும் இறைவன்பால் கொண்ட அன்பு மாறாது இருக்க இறைவனின் அருளை நாடு.

2. சிவபோகத்தைத் தவிர வேறு எந்த இன்பமும் உயிருக்கு ஒரு பொருட்டாகாது.

3. உண்மையான அன்பு இறைவனிடம் கொள்ள இறைவன் அருள் வேண்டும்.

4. ஒவ்வொரு பிறப்பிலும் பொய் தவிர்ந்த மெளிணியன்பு செழுத்த இறையருள் வேண்டும்.

5. மண்ணும்  விண்ணும் எல்லாமுமே இறைவனை அடையவே விரும்பி வழிபடுகின்றன.

6. இறை திருவடி ஐம்பொறிகளால் அறிய முடியாது அதனை அறியும் வழியும் இறைவனே காட்ட வேண்டும்.

7. இறைவனே இரங்கி அருளாவிடில், அவனை சென்றடையும் வழி ஒன்றில்லை.

8. உலக இன்பமும் மறுமை இன்பமும் சிவபரம்பொருள் தரவே வரும்.

9. இறைவனுக்கு அன்பில்லாது, வாழ்வதைவிட சாவதே மேல்.

10. இரும்பைப் போன்ற மனத்தையும் கனிய வைப்பவன் இறைவன், நம் முயற்சி என்று எதுவும் இல்லை.



ஆனந்த பரவசம்

(மெய்யுணர்வினால் இறையருள் பற்றியவர்கள் அடைவது ஆனந்தம், அதில் தன்னை மறந்து திளைப்பது பரவசம்)

1. மெய்ப்பொருளைப் பற்றிய அனைத்து உயிர்களும் இறைவனின் திருவருளைப் பெறும்.

2. மெய்யடியார்கள் உலகப் பேற்றை வெறுத்து, வீடுபேற்றையே விரும்புவார்கஷீமீ.

3. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் உலகில் வாழ விரும்பமாட்டார்கள்.

4. மெய்யுணர்வு பெறும் வழியை முறையாக உணர்ந்து அதன் வழி நின்று இறைவனைக் காண முயலவேண்டும்.

5. பொளிணிமையினை நீக்கி மெளிணிமையினை நாடிச் செல்வோரே சிவலோகம் அடைவர்.

6. முற்றிலும் இறைவனை உணர்ந்த அடியார்கள் அவனைத் தவிர வேறொன்றை நினையாது வீட்டின்பம் அடைவர்.

7. மெய்யடியார்கள் மீளாத உலகமாகிய வீட்டினுள் புகுவது திண்ணம்.

8. அதற்கு உறைப்பு மிக்க உண்மை அன்பு வேண்டும்.

9. வினைகள் அறுத்து திருவடி இன்பம் தருபவன் இறைவனே.

10. பிழையுணர்ந்து வருந்தி, அழுது, தொழும் எல்லா உயிரும் ஆனந்த பரவசத்தில் அழுந்தும்.



ஆனந்ததீதம்

(பரவச உணர்வின் முதிர்ந்த நிலை)
(பேரின்பத்தில் தன்னை மறந்த நிலை)

1. இறைவன் குருவாக வந்து ஆட்கொண்டும், திருவடி சேரும் விதிவேண்டும்.

2. மெய்யடியார்கள் இறைவன் திருவடியை அடைவது உறுதி.

3. எல்லா உயிர்களுக்கும் திருவருள் பெரும் தகுதியினை சிவபரம்பொருளே ஏற்படுத்தும்.

4. எது நடந்தாலும் இறைவன் பார்த்துக்கொள்வார் என்று முழு சரண் அடைதல் வேண்டும்.

5. உயிர்கள் அறிவதற்கு அறியவனான இறைவன் தன் கருணையினால் வலியவந்து அருளுவன்.

6. இறைவன் சர்வ வல்லமையாளன்.

7. இறைவனின் திருவடியே உயிர்களுக்கு பற்றுக்கோடு.

8. இறைவன் அடியார்களுக்கு அருந்துணையாக இருந்து அருளுகின்றான்.

9. மெய்யடியார்கள் எப்பொழுதும் இறைவனை அவன் திருவடியின் அருகில் இருந்து துதிக்கவே விரும்புர்.

10. திருவடி பேறு / இறையனுபவம் சொல்லற்கரியது.