Friday, April 26, 2024

16. நேயத்தே நின்ற நிமலன்

16. நேயத்தே நின்ற நிமலன் “நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி” எனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம்...

15. சிவன் சேவடி போற்றி

15.சிவன் சேவடி போற்றி தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...

14.தேசன் அடி போற்றி

14. தேசன் அடி போற்றி  “யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அழுது அழுது பெருமானை எண்ணி வழிபட்டவர் மணிவாசகப் பெருமான். தான் தமிழ்...

13.எந்தை அடி போற்றி

13.எந்தை அடி போற்றி       ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைக் கொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை, “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையிலும் “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்று திருப்பள்ளிஎழுச்சியிலும்  உயிர்கள் உலகில் இடம்பெறுவதற்குப் பெருமானேமுதலில் அருள் புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப்பரம்பொருளைப் போற்றி வழிபடுவதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அன்றாட வாழ்வில் எல்லா உயிர்வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். பெருமானே உயிரற்ற எல்லாப் பொருள்களையும் உயிர்கள் பயன்பெறும் பொருட்டு இசைவிக்கின்றான் என்பதனைத்...

12. ஈசன் அடி போற்றி

12. ஈசன் அடி போற்றி             திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் வழக்கு ஏற்படும் அளவிற்குத் திருவாசகம் ஓதுபவரின் உள்ளத்தை உருக்கக் கூடியது. திருவாசகத்தை ஓதிய வள்ளல்   இராமலிங்க அடிகள், “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம்சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”  என்று குறிப்பிடுவார். அத்தகைய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மந்திரச்செய்யுள்களின் எண்ணிக்கை 658. இதற்கு ஏற்றாற் போல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள சிவபுராணத்தில், “வாழ்க”, “வெல்க”, “போற்றி” என்ற சொற்களின் எண்ணிக்கையும் அமைந்துள்ளன. சிவபுராணத்தில்          ...

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை  உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர். இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை...

10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்

10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன் மந்திரச் செய்யுள்களான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்குவது திருவாசகம்.  மணிவாசகப் பெருமான் அருளிய அத்திருவாசகத்தில் இடம் பெற்றிருப்பது சிவபுராணம். சிவபுராணம் இறப்பு வீடுகளில் பாடப்பெறுவது என்று பிதற்றும் அறியாமை உடையவர்களின் சிறுமையைச் சம்மட்டியால் அடிப்பது போன்று மணிவாசகர் இயம்பியுள்ள அரிய கருத்துக்களில் ஒன்று, “கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க” என்பது. நம் போன்ற உயிர்களுக்கு அளவிடற்கு அரிய உதவிகளைப் பெருமான் செய்து  வருகின்றான் எனும் உண்மையை உணருகின்ற உயிர்கள் உண்மையான நன்றிப் பெருக்கால்  அவனைக் கைக்கூப்பித் தொழும். அப்படித் தொழும்போது பெருமான் நம் உள்ளத்தில்  மகிழ்ச்சியுடன் இருப்பதனை உணர இயலும் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார். நடப்பாற்றல், மலம், சிவம், வனப்பாற்றல், யாக்கை எனும் சொற்களின் முதல் எழுத்துக்களின்...

9. புறத்தார்க்குச் சேயோன்

9. புறத்தார்க்குச் சேயோன் சீர்மிகு செந்தமிழரின் முற்கால வாழ்வியல் முறைமையில் சைவம் என்னும் செந்நெறி, அது சைவநெறி என்று அறியாமலேயே பெரும்பாலோரால் பின்பற்றப் பெற்று வந்துள்ளது. கற்று அறிந்த பெருமக்கள் இதனை நன்கு அறிந்து பின்பற்றியது ஒருபுறம் இருக்க, கல்வி அறிவு இல்லாத பாமரமக்கள் பல்வேறு சிறு தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்துள்ளனர் என்பதும் அறியக்கிடக்கின்றது. அவ்வகையில் பெரிய மரங்களையும் மலைகளையும் கடலையும் ஆறுகளையும் காடுகளையும் தெய்வங்கள் அவற்றில் தங்கி இருந்து காக்கின்றன என்று எண்ணி அவற்றை அச்சத்தாலும் நன்றி உணர்வாலும் வழிபட்டு வந்துள்ளனர். ஐந்து வகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களான முருகன், திருமால், வேந்தன், வருணன்,கொற்றவை ஆகிய திணைத் தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இயற்கையின் மீது கொண்ட அச்சம் ஒருபுறம் இருக்க, தங்களின் பாதுகாப்புக்கு என போரில் இறந்த வீரர்களையும் குமுகாயத்தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் காவல் தெய்வங்களாக  நடுகல்லை நட்டு வழிபாட்டினைச் செய்துள்ளனர். இவையே பின்பு முனி வழிபாடாய் மாறிற்று என்பர்....

8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை

உயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...

7. வேகம் கெடுத்தாண்ட

7.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமொழி. கல்லையும் கனிவிக்கும் இவ்வரிய தமிழ் மந்திரத்தை அருளிய மணிவாசகப் பெருமான், சிவபுராணம் எனும் பகுதியில் சிவபெருமான் உயிர்களுக்குப் பழைமை தொட்டு ஆற்றி வரும் அரிய செயல்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் அன்றாட வழிபாட்டிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களிலும் தவறாது ஓதப்படவேண்டிய இச்சிவபுராணத்தில், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மாந்தர்களின் மன வேகம் காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைக் காட்டிலும் வேகமாய் உள்ளது என்று நாளும் திருவாசகத்தை ஓதி மனம் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்  என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவது மனவேகத்தினையே குறிப்பிடுகின்றது. பிறர் நில உலகையும் பிற உலகையும் ஆளக்கூடும். உயிர்களின் மனவேகத்தினை அடக்கி ஆளக்கூடியவன் பெருமான் ஒருவனே என்பதனால், வேகம்கெடுத்து ஆண்ட வேந்தன்  என்று சிவபெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மனவேகம் என்பது யான் எனது எனும் செருக்கினால் ஏற்படுவது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யான் எனது எனும் செருக்கு உயிரின் அறிவை மறைக்கின்ற ஆணவம் என்பதின் வெளிப்பாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இருள் என்பது பொருட்களைக் காண இயலாதவாறு மறைத்தாலும் இருள்தான் இருப்பதனைக் காட்டும் என்பர். இதனால் இருள் சூழ்ந்து இருப்பதனைக் கண்டு அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்ற ஆணவ இருளோ, தான் இருப்பதையும் காட்டாது தான் செய்கின்ற மறைப்பையும் உயிர்களுக்குக் காட்டாது என்பர். இதனால் உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைக்கின்றது என்பதனை உணராது நிற்கின்றன என்பர். உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைப்பதனால் அறிவுத் தெளிவு இன்றி முனைப்புடன் பல்வேறு செயல்களைத் தன்மூப்பாகச் செய்கின்றன என்பர். இதனையே யான் எனது எனும் செருக்கோடு செயல்படுவதாய்க் குறிப்பிடுவர். உயிர்களைப் பற்றி இருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொண்டு, இறைவனிடத்தே இருக்கின்றநிலையான பேரின்பத்தை அடைவதற்கு இறைவன் அவனின் கருணையின் பேரில் அளித்தவற்றைக் கொண்டே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராது உயிர்கள் இருமாப்புக் கொள்கின்றன என்பர். ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் அளிக்கும் உயிர்களின் வாழிடமான உலகம், பல்வேறு வகையான உடம்புகள், அவ்வுடம்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப் பட்டுள்ள கருவிகள், ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேம்படுவதற்காக் கொடுக்கப்படுகின்ற உயிர்களைச் சுற்றி உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமானே உயிர்களுக்கு அளித்துள்ளான் என்பதனை உணராமல், நான்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST