Saturday, January 19, 2019
Home திருவாசகம் சிவபுராணம்

சிவபுராணம்

6. ஏகன் அநேகன் இறைவன்

6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க              செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின்  இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது.  இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில்  மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத  "சிவமாக" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் "சிவன்" ஆகின்றான் என்று  திருமந்திரத்தின் முதல் பாடலான, "ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..",  எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில்  தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் "சிவை" என்கிறது. பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய  ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து  காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும்  பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், "எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்"  என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும்  இறைவனை விட்டு  வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும்  உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து  வழிபட்டு மகிழ்ந்தனர். இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு  பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான்.  இதனையே,...

2. நாதன் தாள் வாழ்க

2. நாதன்தாள் வாழ்க           ஆர் உயிர்களின் மீது கொண்ட பரிவினால் காலம் காலமாகப் பெருமான் செய்து வருகின்ற பேர் உதவியினை விளக்குவது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள...

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...

35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே “வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று...

17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்

17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வியானது அப்பிறவிக்குகு மட்டும் அல்லாமல் ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்...

29. பொல்லா வினையேன்

29. பொல்லா வினையேன் செந்தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கையான சித்தாந்த சைவம் இறை, உயிர், தளை எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக் குறிப்பிடும். தளை அல்லது பாசம் என்பதே உயிர்கள் பரம்பொருளான சிவத்தை அடையத்...

36. வெய்யாய் போற்றி

36. வெய்யாய் போற்றி சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை  உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர். இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை...

33. விமலா போற்றி

33. விமலா போற்றி சிவபெருமான் இயல்பாக மும்மலம் நீங்கினவன் என்று தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்பனவே மும்மலங்கள் எனப்படுகின்றன. இம்மும்மலங்களைத் தமிழில் ‘தளை’ என்கின்றனர்....

4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

குருவினை ஆசிரியர் அல்லது ஆசான் என்று அன்னைத் தமிழில் குறிப்பிடுவர். ஆசு+இரியர் எனும் சொல் குற்றத்தை அல்லது குறையைப் போக்குபவர் என்று பொருள்படும். ஆசான் என்பவர் குற்றம் அல்லது குறை அற்றவர் என்பர்....
- Advertisement -

MOST POPULAR

HOT POST