6. ஏகன் அநேகன் இறைவன்
6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது. இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத "சிவமாக" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் "சிவன்" ஆகின்றான் என்று திருமந்திரத்தின் முதல் பாடலான, "ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..", எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் "சிவை" என்கிறது.
பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், "எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்" என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே,...
5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
பிறவி எனும் பிணியை அறுக்கவும் பெருமானின் திருவடியை அடையவும் எல்லை இல்லா நிலைத்த இன்பத்தில் திளைக்கவும் வழிகாட்டுபவை சிவ ஆகமங்கள். செந்தமிழ்ச் சிவ ஆகமங்கள் இருபத்து எட்டு. சிவ ஆகமங்கள் சிதாந்தச் சைவர்களின்...
4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
குருவினை ஆசிரியர் அல்லது ஆசான் என்று அன்னைத் தமிழில் குறிப்பிடுவர். ஆசு+இரியர் எனும் சொல் குற்றத்தை அல்லது குறையைப் போக்குபவர் என்று பொருள்படும். ஆசான் என்பவர் குற்றம் அல்லது குறை அற்றவர் என்பர்....
3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்
பெருமான் உறைகின்ற பொருள்களாக எட்டைக் குறிப்பிடுவர். இதனை வடமொழியில் பெருமானின் அட்ட மூர்த்தம் என்பர். பெருமான், நிலம், நீர், தீ, வளி, வெளி, திங்கள், ஞாயிறு, உயிர் என எட்டுப் பொருள்களில் நின்று...
2. நாதன் தாள் வாழ்க
2. நாதன்தாள் வாழ்க
ஆர் உயிர்களின் மீது கொண்ட பரிவினால் காலம் காலமாகப் பெருமான் செய்து வருகின்ற பேர் உதவியினை விளக்குவது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள...
1. நமசிவய வாழ்க
1. நமசிவய வாழ்க
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி...
திருச்சதகம்
மெய்யுணர்தல்
1. பொய் தவிர்த்து மனம், வாக்கு, காயத்தினால் வழிபடல் வேண்டும்.
2. சிவத்தை மட்டுமே வணங்குதல் வேண்டும், இறைவன் திருவருள் பெறவேண்டும் என்ற வேற்கை வேண்டும்.
3. உலக பதவிகள் நிலையல்ல, அதனால் திருவருள் வைராக்கியம்...
















