Tuesday, June 18, 2019
Home திருமுறை திருவாசகம்

திருவாசகம்

6. ஏகன் அநேகன் இறைவன்

6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க              செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின்  இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது.  இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில்  மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத  "சிவமாக" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் "சிவன்" ஆகின்றான் என்று  திருமந்திரத்தின் முதல் பாடலான, "ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..",  எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில்  தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் "சிவை" என்கிறது. பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய  ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து  காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும்  பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், "எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்"  என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும்  இறைவனை விட்டு  வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும்  உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து  வழிபட்டு மகிழ்ந்தனர். இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு  பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான்.  இதனையே,...

23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட

23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண்ணைக் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்தேன் என்பதனை, “கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி”...

2. நாதன் தாள் வாழ்க

2. நாதன்தாள் வாழ்க           ஆர் உயிர்களின் மீது கொண்ட பரிவினால் காலம் காலமாகப் பெருமான் செய்து வருகின்ற பேர் உதவியினை விளக்குவது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள...

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை  உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர். இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை...

14.தேசன் அடி போற்றி

14. தேசன் அடி போற்றி  “யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அழுது அழுது பெருமானை எண்ணி வழிபட்டவர் மணிவாசகப் பெருமான். தான் தமிழ்...

28. நின் பெரும் சீர்

28. நின் பெரும் சீர் மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம்...

திருச்சதகம்

மெய்யுணர்தல்  1. பொய் தவிர்த்து மனம், வாக்கு, காயத்தினால் வழிபடல் வேண்டும். 2. சிவத்தை மட்டுமே வணங்குதல் வேண்டும், இறைவன் திருவருள் பெறவேண்டும் என்ற வேற்கை வேண்டும். 3. உலக பதவிகள் நிலையல்ல, அதனால் திருவருள் வைராக்கியம்...

1. நமசிவய வாழ்க

1. நமசிவய வாழ்க “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி...

34. விடைப்பாகா போற்றி

34. விடைப்பாகா போற்றி பரம்பொருள் ஒன்று. அப்பரம்பொருளைச் சிவம் என்று சீர்மிகு செந்தமிழ்ச் சைவர் குறிபிடுவர். சிவம் எனும் பரம்பொருளின் ஆற்றலைத் திருவருள் ஆற்றல் அல்லது சத்தி என்பர். சிவம் எனும் பரம்பொருள் தனது...

8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை

உயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST