8. இல்லாள் உயர்வு

1627

ஓர் இல்லத்தரசிக்குக் கணவனைக் காட்டிலும் சிறந்த துணை ஆகுகின்றவர் வேறு எவரும் இருக்க இயலாது என்பதனைக் “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று , பாண்டியன் வீழ்ந்து  உயிர் நீத்த அடுத்த கணமே கோப்பெருந்தேவியும் தன் உயிர் நீத்தாள் என்று சிலம்பில் இளங்கோவடிகள் குறிப்பிடுவார். ” உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”என தன் கணவனுக்காக வழக்குரைத்து, மதுரை மாநாகரைத் தன் கற்பு திடத்தால் எரித்து வானுலகம் புகுந்தாள் கண்ணகி என்னும் பெருமாட்டி. கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பினை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர் என்பதனை, ” பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு ” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுகிறார். இல்லத்தரசிகள் சிறந்து விளங்கித் தத்தம் இல்லத்தலைவர்களுக்கு உயிர்த்துணையாய் நின்று சிறப்புப் பெற்றமையைப் போற்றும் தமிழர் பண்பாட்டினைப் பெரியபுராணத்திலும் காணலாம்.

மனை அறத்திலும் கற்பிலும் சிறந்த மனைவியரை, விதிமுறைப்படி மணம் புரிந்துகொண்ட குலமடந்தையை அணுகி, “இன்று உன்னை இங்கு வந்துள்ள அடியாருக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறினார். அதற்கு அவ்வம்மையார் முதலில் கலக்கமடைந்து பின் தெளிந்தார். பிறகு அவ்வம்மையார்,”இன்றைக்கு நீர் அடியேனுக்கு அருளியது இவ்வாறாயின், என்னுடைய உயிர்க்குத்  தனித்துணையாகிய முதல்வரே! நீர் கூறிய கட்டளை ஒன்றை நான் செய்தலேயன்றி, அடியேனுக்கு வேறு உரிமை உண்டா? என்று கூறித் தம்முடைய ஒப்பற்ற பெருமைக்குரிய கணவனாரை வணங்கினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பின் அவ்வம்மையார் மறையவர் வடிவில் வந்திருக்கும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அவர் ஏவலுக்காக நின்றிருந்தார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

தமிழ்ப்பெண்களின் சிறப்பு நாணமாகும்.அந்நாணத்தின் சிறப்பாய் விளங்குவது கற்பிற் சிறத்தலாகும். அக்கற்பின் மணிமுடியாய் விளங்குவது தன் கணவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிதலாகும். அவ்வகையில் தமிழ்ப்பெண்களின் கற்பிற்கு அணிகலனாக விளங்குவது கணவன் சொல்லைத் தலைமேற்கொண்டு நிற்றலாகும் என்று சேக்கிழார் உணர்த்துகின்றார். அதுவே இல்லத்தரசிகளுக்குரிய அறமாகும் என்றும் உணர்த்துகின்றார்.

தனக்குக் கண்ணாய் இருக்கின்ற கணவன் ஒருபோதும் தனக்குத் தீங்கான ஒன்றைச் செய்யான் என்பதில் அவ்வம்மையார் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியும், தன் கணவனைப் புரிந்து வைத்திருந்த இயல்பும்,  கணவனின் இறைத்தொண்டிற்கும் , ஈடேற்றத்திற்கும் துணைநிற்கின்றோம் என்ற தெளிவுமே அவ்வம்மையாரை இன்றளவும் நம்மைப் பேசவும் புகழவும் வைத்திருக்கின்றது.

இயற்பகையாரின் மனைவியாருடைய உறவினர்களும், அந்நாயனாரின் உறவினர்களும் இச்செயலைக் கண்டித்து இயற்பகையாரை எதிர்க்கச் சூழ்ந்தனர். அதுபோழ்து மறையவர் கோலத்தில் வந்த சிவனார் பயப்படுவதுபோல் காட்டி அவ்வம்மையாரைப் பார்க்க, அவ்வம்மையார், “பயம் வேண்டாம், இவ்வியற்பகையார் அவர்களை வெல்வார்” என்று இயற்பகையாரின் துணைவியார் தம் கணவரின் வீரத்தையும் , துணிவையும் , ஆற்றலையும் உணர்ந்து தெளிந்து வாழ்ந்துள்ளமையைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். கணவனின் வீடேற்றத்திற்கு துணைநின்று தாமும் வழுவாது அந்நெறியில் நின்று இன்றளவும் போற்றப்படுகின்ற அப்பெருமாட்டியின் உயர்வினை என்னே என்பது! திருக்கார்த்திகை