36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
பெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர்...
57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...
சைவ வினா விடை (2)
பக்கம் :
சைவ வினா விடை
பக்கம் :
சைவ வினா விடை (4)
பக்கம் :
3. முடி இரக்குதல்
உயரிய வாழ்வியல் உண்மைகளைத் தங்கள் வாழ்க்கைச் சுற்றில் வாழ்வியல் கரணங்களாகச் செயல்படுத்தி வருகின்ற சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் மற்றொரு வாழ்வியல் கரணம் குழந்தைகளுக்கு முடி இரக்குதல் ஆகும். குழந்தைகளுக்கு முடி இரக்குதல் அல்லது...
9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்
ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு...
6. ஏகன் அநேகன் இறைவன்
6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது. இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத "சிவமாக" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் "சிவன்" ஆகின்றான் என்று திருமந்திரத்தின் முதல் பாடலான, "ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..", எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் "சிவை" என்கிறது.
பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், "எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்" என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே,...
31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
31: எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் உயிர்கள் நால்வகையில் தோன்றி எழுவகை பிறப்புக்களில் உழன்று இறைவனை அடைகின்றன என்று குறிப்பிடுகின்றது. உலகில் தோன்றும் உயிர் வகைகள்...
2. தமிழ் மந்திரம்
மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய் நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக்...