Thursday, October 6, 2022
Home திருவாசகம் சிவபுராணம்

சிவபுராணம்

36. வெய்யாய் போற்றி

36. வெய்யாய் போற்றி சிவம் எனும் பரம்பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வாறு அருளும் போது சிவம்...

28. நின் பெரும் சீர்

28. நின் பெரும் சீர் மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம்...

25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்

25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம், பரம்பொருளான சிவமே அவர்களுக்கு முழுமுதல் பொருள் என்று குறிப்பிடுகின்றது. அச்சிவம் ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் இருப்பதனால்...

15. சிவன் சேவடி போற்றி

15.சிவன் சேவடி போற்றி தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...

35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே “வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று...

24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்

24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் காலம் காலமாய் உயிர்களுக்குப் பெருமான் இயற்றும் உதவியினைச் சொல்வது திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் திருவாசகத்தினை அருளிய மணிவாசகர், “எண்ணுதற்கு எட்டா எழில்ஆர்...

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை  உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர். இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை...

9. புறத்தார்க்குச் சேயோன்

9. புறத்தார்க்குச் சேயோன் சீர்மிகு செந்தமிழரின் முற்கால வாழ்வியல் முறைமையில் சைவம் என்னும் செந்நெறி, அது சைவநெறி என்று அறியாமலேயே பெரும்பாலோரால் பின்பற்றப் பெற்று வந்துள்ளது. கற்று அறிந்த பெருமக்கள் இதனை நன்கு அறிந்து பின்பற்றியது ஒருபுறம் இருக்க, கல்வி அறிவு இல்லாத பாமரமக்கள் பல்வேறு சிறு தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்துள்ளனர் என்பதும் அறியக்கிடக்கின்றது. அவ்வகையில் பெரிய மரங்களையும் மலைகளையும் கடலையும் ஆறுகளையும் காடுகளையும் தெய்வங்கள் அவற்றில் தங்கி இருந்து காக்கின்றன என்று எண்ணி அவற்றை அச்சத்தாலும் நன்றி உணர்வாலும் வழிபட்டு வந்துள்ளனர். ஐந்து வகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களான முருகன், திருமால், வேந்தன், வருணன்,கொற்றவை ஆகிய திணைத் தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இயற்கையின் மீது கொண்ட அச்சம் ஒருபுறம் இருக்க, தங்களின் பாதுகாப்புக்கு என போரில் இறந்த வீரர்களையும் குமுகாயத்தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் காவல் தெய்வங்களாக  நடுகல்லை நட்டு வழிபாட்டினைச் செய்துள்ளனர். இவையே பின்பு முனி வழிபாடாய் மாறிற்று என்பர்....

16. நேயத்தே நின்ற நிமலன்

16. நேயத்தே நின்ற நிமலன் “நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி” எனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம்...

26. விளங்கு ஒளியாய்

26.விளங்கு ஒளியாய் செந்தமிழ்ச் சைவர்களின் வழிபடு பரம்பொருளாய் விளங்குவது சிவம் எனும் செம்பொருள். செம்பொருளான அச்சிவத்தை அதன் பொது நிலையில் பிள்ளையார், முருகன், அம்மை, சிவன் என்று வடிவ நிலையில் வழிபடுவர். பொதுநிலை சிவத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT POST