Friday, May 7, 2021

16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்

இல்வாழ்வு என்பது பெருங்கடலைப் போன்றது. பல இன்ப துன்ப நுகர்ச்சிகளை உள்ளடக்கியது. உற்சாகத்தையும் தளர்ச்சியையும் மாறி மாறி அளிப்பது.. வாழ்ந்தே ஆக வேண்டியது. இன்பமும் துன்பமும் மாறி மாறி இவ்வாழ்க்கைப் பெருங்கடலினை நீந்துவதற்கும்...

பங்குனி உத்திர திருநாள்

பங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது திருக்கல்யாணம் அல்லது தெய்வத்திருமணங்கள்தான். பங்குனி உத்திரத்தைத் திருமண விரத நாள் என்றும் அழைப்பர். சிவன், முருகன், அம்பாள் போன்ற தெய்வங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து, இறைவனைத் திருமணக்கோலத்தில்...

25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்

25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம், பரம்பொருளான சிவமே அவர்களுக்கு முழுமுதல் பொருள் என்று குறிப்பிடுகின்றது. அச்சிவம் ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் இருப்பதனால்...

5. அறிச்சுவடி எழுதுதல்

நல்லது தீயது என்று ஒன்றைப் பகுத்து ஆய்ந்து அறிவோடு வாழ்வதற்குக் கண்ணாயும் ஒளியாயும் இருப்பது கல்வி. எண்களும் எழுத்துக்களுமே கல்விக்கு அடிப்படையாக இருக்கின்றன. மாந்தர்களாகிய நாம் எழுத்துக்களைக் கொண்டு எண்ணியும் எண்களைக் கொண்டு...

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்

11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை  உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர். இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை...

20. உண்மையான கடவுளை வழிபடுவோம்

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் கடவுளின் இயல்புகளை விளக்குகையில், பரம்பொருளான கடவுள் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன் என்று குறிப்பிடுகின்றது. முட்டை, கரு, விதை, வியர்வை என்ற உயிர்களின் நால்வகைத் தோற்றத்திற்கும் வானவர்,...

12. ஈசன் அடி போற்றி

12. ஈசன் அடி போற்றி             திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் வழக்கு ஏற்படும் அளவிற்குத் திருவாசகம் ஓதுபவரின் உள்ளத்தை உருக்கக் கூடியது. திருவாசகத்தை ஓதிய வள்ளல்   இராமலிங்க அடிகள், “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம்சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”  என்று குறிப்பிடுவார். அத்தகைய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மந்திரச்செய்யுள்களின் எண்ணிக்கை 658. இதற்கு ஏற்றாற் போல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள சிவபுராணத்தில், “வாழ்க”, “வெல்க”, “போற்றி” என்ற சொற்களின் எண்ணிக்கையும் அமைந்துள்ளன. சிவபுராணத்தில்          ...

5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்

தங்கள் தாய்மொழியைப் போற்றிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் உறவு முறைகளுக்கும் தமிழில் பெயரிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றனர் என்பதனைப் பெரியபுராணம் பறைசாற்றுவதைக் கண்டோம். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த பெயர்களில் அழைப்பதனால் உயிர்...

114. அருள் வீழ்ச்சி

இறைவனை அடைகின்ற அறிவு வழிபாட்டின் வாயில்களாக விளங்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றின் பயனாய்ப் பெருமானிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட, அதன் விளைவாய் விளைவது இறைவனின் திருவருள் வீழ்ச்சியாகும். இத்திருவருள் வீழ்ச்சியே...

மகா சிவராத்திரி

தமிழர் சமயமான சைவ சமயம், இறைவன் உருவம், அருவுருவம், அருவம் என்ற நிலைகளில் நின்று உயிர்களுக்கு அருள்புரிகிறான் என்று குறிப்பிடுகிறது. உருவம் அற்ற இறைவன், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST