Thursday, April 18, 2024

2. தமிழ் மந்திரம்

மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய்  நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக்...

இறைவனை அடையும் வழிகள் – நோன்பு

ஆ.நோன்பு                  இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம்...

சைவம் காட்டும் இல்லறம்

சிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற  பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி  என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார்....

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்

22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...

15. சிவன் சேவடி போற்றி

15.சிவன் சேவடி போற்றி தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...

இறைவனை அடையும் வழிகள் – சீலம்

அ. சீலம் இறைவனிடத்தில் ஒர் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை அல்லது முறைமையைத் தமிழர் சமயமான சைவ சமயம் சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. இவ்வாழ்வியல்...

7. வேகம் கெடுத்தாண்ட

7.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமொழி. கல்லையும் கனிவிக்கும் இவ்வரிய தமிழ் மந்திரத்தை அருளிய மணிவாசகப் பெருமான், சிவபுராணம் எனும் பகுதியில் சிவபெருமான் உயிர்களுக்குப் பழைமை தொட்டு ஆற்றி வரும் அரிய செயல்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் அன்றாட வழிபாட்டிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களிலும் தவறாது ஓதப்படவேண்டிய இச்சிவபுராணத்தில், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மாந்தர்களின் மன வேகம் காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைக் காட்டிலும் வேகமாய் உள்ளது என்று நாளும் திருவாசகத்தை ஓதி மனம் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்  என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவது மனவேகத்தினையே குறிப்பிடுகின்றது. பிறர் நில உலகையும் பிற உலகையும் ஆளக்கூடும். உயிர்களின் மனவேகத்தினை அடக்கி ஆளக்கூடியவன் பெருமான் ஒருவனே என்பதனால், வேகம்கெடுத்து ஆண்ட வேந்தன்  என்று சிவபெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மனவேகம் என்பது யான் எனது எனும் செருக்கினால் ஏற்படுவது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யான் எனது எனும் செருக்கு உயிரின் அறிவை மறைக்கின்ற ஆணவம் என்பதின் வெளிப்பாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இருள் என்பது பொருட்களைக் காண இயலாதவாறு மறைத்தாலும் இருள்தான் இருப்பதனைக் காட்டும் என்பர். இதனால் இருள் சூழ்ந்து இருப்பதனைக் கண்டு அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்ற ஆணவ இருளோ, தான் இருப்பதையும் காட்டாது தான் செய்கின்ற மறைப்பையும் உயிர்களுக்குக் காட்டாது என்பர். இதனால் உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைக்கின்றது என்பதனை உணராது நிற்கின்றன என்பர். உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைப்பதனால் அறிவுத் தெளிவு இன்றி முனைப்புடன் பல்வேறு செயல்களைத் தன்மூப்பாகச் செய்கின்றன என்பர். இதனையே யான் எனது எனும் செருக்கோடு செயல்படுவதாய்க் குறிப்பிடுவர். உயிர்களைப் பற்றி இருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொண்டு, இறைவனிடத்தே இருக்கின்றநிலையான பேரின்பத்தை அடைவதற்கு இறைவன் அவனின் கருணையின் பேரில் அளித்தவற்றைக் கொண்டே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராது உயிர்கள் இருமாப்புக் கொள்கின்றன என்பர். ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் அளிக்கும் உயிர்களின் வாழிடமான உலகம், பல்வேறு வகையான உடம்புகள், அவ்வுடம்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப் பட்டுள்ள கருவிகள், ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேம்படுவதற்காக் கொடுக்கப்படுகின்ற உயிர்களைச் சுற்றி உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமானே உயிர்களுக்கு அளித்துள்ளான் என்பதனை உணராமல், நான்...

122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு

122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று திருநீறு ஆகும். “பொங்குஒளி வெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே” என்று திருநீற்றின் பெருமையைத் தெய்வச் சேக்கிழார்,...

பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார்....

திருநீறு

இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம், கோபம், மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT POST