Tuesday, July 14, 2020
Home சமயம் கட்டுரைகள்

கட்டுரைகள்

114. அருள் வீழ்ச்சி

இறைவனை அடைகின்ற அறிவு வழிபாட்டின் வாயில்களாக விளங்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றின் பயனாய்ப் பெருமானிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட, அதன் விளைவாய் விளைவது இறைவனின் திருவருள் வீழ்ச்சியாகும். இத்திருவருள் வீழ்ச்சியே...

48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்

“சாகாமைக் கற்பதுவே கல்வி,” என்பார் ஔவைப் பிராட்டி. கல்வியின் நோக்கம் என்னவென்றால் இனி இவ்வுலகில் பிறக்காமல் இருப்பது எப்படி என்பதனைக் கற்றுக் கொள்வதுதான் என்கிறார் ஔவைப் பிராட்டி. பள்ளிகளில் நடத்தப்படும் அரசாங்கத் தேர்வுகளில்...

27. பனை மரத்துப் பருந்து

உயிர் தங்கி வாழும் உடம்பு நிலை இல்லாதது என்பதனால், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா,” என்ற பொதுப்பாடல் ஒன்று உண்டு. உடல் நிலை இல்லாதது, அது அழிந்துபடும் என்றாலும் மெய்ப்பொருளான...

41. உள் எழும் சூரியன்

“பேராற்றலும் பெரும் கருணையும் தூய பொருளுமாய உன்னை எனக்குத் தந்து, சிற்றறிவும் தன்னலமும் சிறுமையும் உடைய என்னை உனது அடியவனாகக் கொண்டாயே இறைவா! நீ என் உடலினை உனக்கு இடமாகக் கொண்டதனால் முடிவில்லாத...

68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது

நடராஜர் என்று வடமொழியில் அழைக்கப்பெறும் ஆடல் வல்லான் அல்லது கூத்தப்பிரான் திருவடிவில், உடுக்கை பரசிவம் இயற்றும் தோற்றுவித்தலையும் அமைந்த கரம் காத்தல் அல்லது நிற்பித்தலையும் குறிக்கும். வீசி நிற்கும் ஒரு கரத்தில் பெருமான்...

திருக்கார்த்திகை

கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி...

17. இல்லை என்று எண்ண வேண்டா!

உலகம் எல்லாம் வல்ல ஒரு பரம் பொருளின் ஆணை வழி நடப்பது என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இப்பரம்பொருளையே, ‘வாலறிவன்” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுகின்றார். இவ்வரிய உண்மையினைத்...

13.எந்தை அடி போற்றி

13.எந்தை அடி போற்றி       ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைக் கொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை, “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையிலும் “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்று திருப்பள்ளிஎழுச்சியிலும்  உயிர்கள் உலகில் இடம்பெறுவதற்குப் பெருமானேமுதலில் அருள் புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப்பரம்பொருளைப் போற்றி வழிபடுவதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அன்றாட வாழ்வில் எல்லா உயிர்வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். பெருமானே உயிரற்ற எல்லாப் பொருள்களையும் உயிர்கள் பயன்பெறும் பொருட்டு இசைவிக்கின்றான் என்பதனைத்...

1. நமசிவய வாழ்க

1. நமசிவய வாழ்க “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி...

8. எட்டு உணர்ந்தான்

அமிழ்தினும் இனிதாம் அன்னைத் தமிழில், “எட்டு” என்பதனை எட்டிப் பிடித்தலையும் எட்டு என்ற எண்ணையும் குறிப்பிடுவர். “நம் பிரான் திருமூலன்” என்று சுந்தரமூர்த்தி அடிகளால் போற்றப் பெற்றத் திருமூலர், தமது திருமந்திரத்தின் முதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT POST