Saturday, January 19, 2019

93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்

சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்ற அகத்தவம் கூடுவதற்கு எட்டு படிநிலைகள் உண்டு என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவச்செறிவில் அகத்தில் இறைவனோடு கூடி இருத்தலுக்கு வழி காணப்படுவதால் அகத்தைத் தூய்மை செய்தல் இன்றியமையாதது ஆகிறது....

46. ஒருமையுள் ஆமை போல்வர்

மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் தமது முதல் தந்திரத்தில் உபதேசம் எனும் அறிவுரை கூறும் பகுதியில் உயிர் முற்றப் பெற்றவர்களின் இயல்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். இவ்வுலகிலே மாந்த உடலோடு வாழும் காலத்திலே...

20. உண்மையான கடவுளை வழிபடுவோம்

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் கடவுளின் இயல்புகளை விளக்குகையில், பரம்பொருளான கடவுள் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன் என்று குறிப்பிடுகின்றது. முட்டை, கரு, விதை, வியர்வை என்ற உயிர்களின் நால்வகைத் தோற்றத்திற்கும் வானவர்,...

முருகன்

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உஉமை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள்...

102. அகத்தவம் எட்டில் எண் பெரும் பேறுகள்

சிவச் செறிவின் முடிந்த பயனான திருவடிப் பேற்றினைப் பெறுதற்கான முயற்சியின் இடையில் கிட்டுவது எண் பெரும் பேறுகள் ஆகும். எண் பெரும் பேறுகள் அட்டமா சித்திகள் என்று வடமொழியில் அழைக்கப் பெறுகின்றன. சிவபெருமானின்...

6. ஏகன் அநேகன் இறைவன்

6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க              செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின்  இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது.  இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில்  மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத  "சிவமாக" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் "சிவன்" ஆகின்றான் என்று  திருமந்திரத்தின் முதல் பாடலான, "ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..",  எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில்  தன்னிடமிருந்து வெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் "சிவை" என்கிறது. பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய  ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து  காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும்  பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், "எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்"  என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும்  இறைவனை விட்டு  வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும்  உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து  வழிபட்டு மகிழ்ந்தனர். இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு  பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான்.  இதனையே,...

86. ஆசிரியரை இகழாமை

மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர், அவர்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்து ஒன்று மட்டுமே இருந்தன என்ற குறிப்பினை நமக்கு அளிக்கின்றார். அவ்வைம்பத்தொரு தமிழ் எழுத்துக்களையும் மந்திரங்கள் என்று குறிப்பிடுகின்றார். தமிழ் எழுத்துக்கள்...

24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி

கண்கள் இமைக்கின்ற கால அளவு கூட இறைவன் நம் உயிரை விட்டுப் பிரியாமல் இருக்கின்றான் என்பதனை, “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்,” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். உடலில் உயிர் உயிர்க்கும்தொறும் இறைவன் நம்மில்...

1. குழந்தைப் பிறப்பு

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கரணங்களைத் தங்கள் வாழ்வில் கொண்டுள்ளனர். கரணங்களைச் சடங்குகள் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், அறிவுக்கு உணர்த்த வேண்டியவற்றைச்...

57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT POST